திரைக்கதை மற்றும் வசனம் - சேது

சேது ஒரு கல்லூரி மாணவன்! சற்று முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவன். கல்லூரி மாணவர்களின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படும் சேது, அதே கல்லூரியில் படிக்கும் மாணவி அபிதாவைப் பார்க்கிறான். அபிதா வெகுளிப் பெண். அதே ஊர் கோயிலில் குருக்களாக இருப்பவரின் மகள். அவளுக்கென்று முடிவு செய்யப்பட்ட முறைப் பையனும் இருக்கிறான்.

அபிதாவின் அப்பாவித்தனமான நடவடிக்கைகள் சேதுவைக் கவர, அவள் மீது காதல் வயப்படுகிறான். அவளும் தன்னைக் காதலிப்பதாக தப்பர்த்தம் செய்து கொள்கிறான்.

அதன் விளைவாக, அபிதாவுக்கு கொலுசு வாங்கிக் கொடுக்கிறான் சேது. அதை வாங்க மறுக்கும் அபிதா, அவனைக் காதலிக்கவில்லையென்றும் சொல்கிறாள். அபிதாவின் மனதில் தான் இல்லையென்று தெரிந்ததும் இடிந்து போகும் சேது, அவளைக் கடத்திக் கொண்டு போய் தன் மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம் கொட்டித் தீர்க்கிறான்.

இதற்கிடையில், தன் அக்காவின் வாழ்க்கைச் சீரழிந்து பேகாமல் இருப்பதற்கு சேதுதான் காரணம் என்பதை முறைப்பையன் மூலம் அறிகிறாள் அபிதா. அதோடு சேதுவின் நல்ல குணங்களும் தெரிய வருகிறது அவளுக்கு. சேதுவின் காதலை ஏற்கிறாள் அபிதா.

தான் விரும்பிய பெண் தன்னை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் சேது திளைத்திருக்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட விபச்சார விடுதி நடத்தும் கும்பல் சேதுவை மூர்க்கமாகத் தாக்குகிறது. அந்த தாக்குதலில் மூளை பாதிக்கப்பட்டு மன நோயாளியாகிறன் சேது. மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படும் சேது, சில நாட்களுக்குப் பின் பாண்டிமடம் என்ற இடத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிறான். அங்கே இருக்கும் ஆயிரக்கணக்கான மன நோயாளிகளுக்கிடையே அவனும் ஒருவனாக சிகிச்சை பெறுகிறான்.

சேதுவை மறக்க முடியாமல் தவிக்கும் அபிதாவை நிர்ப்பந்தித்து அவளது முறைப்பையனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறது.

பாண்டிமடத்தில் கொடுக்கப்பட்ட சிகிச்சையில் மனநிலை சரியாகும் சேது, அங்கிருந்து தப்பித்து அபிதாவைப் பார்க்க வருகிறான்.

முறைப்பையனை மணக்க இஷ்டமில்லாமல் உயிரை மாய்த்துக்கொண்ட அபிதா பிணக் கோலத்தில் கிடக்கிறாள். அதைக் கண்டு அதிர்ச்சியடையும் சேது, தன் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரையும் துறந்து மீண்டும் பாண்டிமடத்துக்கே செல்கிறான்.

காட்சிகள் :